YouLead உங்களுக்கு
எவ்வாறு உதவுகிறது?

நாம் யார்?

நாம் யார்?

YouLead ஆனது ஐக்கிய அமெரிக்க அரசாங்க அபிவிருத்தி முகவரான USAID மற்றும் அபிவிருத்தி மற்றும் கூட்டிணைத்தலுக்கான சுவிஸ் முகவரான SDC ஆகியவற்றின் ஆதரவுடன் IESC இனால் செயற்படுத்தப்பட்டுள்ள 18 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க செயற்திட்டமாகும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சியினை மேம்படுத்தல் திறமைமிக்க தொழிற்படையை உருவாக்குதல் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இளம் தலைமுறையினரை ஆக்கவளம் கொண்ட தொழிற்துறைகளில் ஈடுபடுத்துவதை நோக்காக கொண்டு செயல்படுகின்றது.

நாங்கள் என்ன செய்கிறோம்

நாங்கள் என்ன செய்கிறோம்

மாணவர்களுக்கு:

  • சந்தையில் தேவையுள்ள தொழிற்திறனை இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்தல்.
  • உலகத்தரம் வாய்ந்த தொழிற்படை ஒன்றை உருவாக்குவதற்கு தனியார் துறையுடன் கைகோர்த்தல்.
  • வாழ்நாள் முழுவதிற்குமான வேலைவாய்ப்பு திறனிற்கான அடித்தளம் ஒன்றை கட்டியெழுப்பல்.
  • தொழிற்துறை அறிவுரையாளர்களை பயிற்றுவித்து அவர்களுக்கு கருவிகளை வழங்குவதன் மூலம் இளம் தலைமுறையினர் தொழிற்துறைசார் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள உதவுதல்.

ஆசிரியர்களுக்கு:

  • சிறந்த பாடத்திட்டத்தை மேம்படுத்தல்.
  • பயிற்சியாளர்களை பயிற்றுவித்தல் – எதை கற்பிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதையும்.
  • அதிகமாக செயல்முறைப்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளையும் ஊக்குவித்தல்.
  • இலங்கையில் பணியிட பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவகங்களின் ஆற்றலினை கட்டியெழுப்பல்.

தொழில்முனைவோருக்கு:

  • இளம் தலைமுறையினருக்கு அவர்களின் சொந்த நிறுவனத்தை நடாத்தக் கூடிய திறனை வழங்குதல்.
  • புதிய நிறுவனங்களை பேணி வளர்க்கும் ஊக்கிகளை கட்யெழுப்ப உதவுதல்.
  • தொழில்முனைவோருக்கு நம்பகமான வழிகாட்டிகளையும் பயிற்றுவிப்பாளர்களையும் வழங்குதல்.
  • இளைஞர்களுக்கான வணிகக் கடன்களுக்கான கடன் எல்லைகளை.
  • நீட்டித்தல் தொடர்பாக கடன் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தல்.

நாம் ஏன் செய்கின்றோம்

நாம் ஏன் செய்கின்றோம்

ஊழியர்களுக்கான தேவைப்பாடு

  • சுற்றுலாத்துறையில் 300,000 மேலதிகமான வேலைவாயப்புக்கள் உருவாக்கப்படும். (SLTDA கணிப்பீடு).
  • கட்டுமானத்துறையில் 400, 000 வேலைவாய்ப்புக்கள் உள்ளன.(கட்டுமானத்துறை சம்மேளன கணிப்பீடு).

தேர்ச்சியுற்ற தொழிலாளர் பற்றாக்குறை

  • தற்போதைய தொழிலாளர் சந்தையில் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதற்கும் திறமையான உழைப்பின் தேவைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதால் திறன்களின் பொருத்தமின்மை தெளிவாகிறது.
  • 250,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்போது வேலையில்லாமல் உள்ளனர். (தொழிலாளர் படை ஆய்வு, 2016)

தொழில்சார் திறன்களை வழங்க செயல்படுகிறது

  • 1.5 மில்லியன் நபர்களுக்கு தொழிற்பயிற்சி (ஜி.டி.எஸ்.டி) மூலம் தொழில் மற்றும் தொடர்புடைய மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய திறன்களுடன் பொது மற்றும் தனியார் துறையால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • வேலை செய்யக் கூடிய வயதில் உள்ள பெண்களில் 66% தொழிற்படையில் இல்லை.

இலங்கை இளைஞர்களுக்கும் போட்டிமிக்க பொருளாதாரத்தில் கோரப்படும் திறன்களுக்கும் இடையில் இறுக்கமான இணக்கப்பாடு காணப்படும் ஓர் எதிர்காலத்தை உருவாக்கிட YouLead ஆனது பொது மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுகின்றது.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்