தொழில் நிபுணத்துவம் இன்றைய திறன்; தொழில் நிபுணத்துவம் என்பது நாம் எவ்வாறு வேலை புரியூம் இடத்தில் அல்லது வேலையில் சிறந்த நடத்தை, தோற்றம் மற்றும் பணியிட நெறிமுறைகளைப் பேணுகின்றோம் என்பதையே கருதுகின்றது. NEXT     உங்கள் தொழில் வெறிக்கு தொழில் நிபுணத்துவம் என்பது மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாகும் NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? தொழில்முறை உயர் தரங்களைக் கொண்ட ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களை விட நம்பகமானவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் உணரப்படுகிறார்கள். தொழில் நிபுணத்துவம் இல்லயென்றால் எமது பிரதிபலிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? நம்பகத்தன்மை உடையவராகவும் நேர ஒழுங்கை பேணுபவராகவும் இருத்தல் வேண்டும். NEXT     கவனமாகவும் நேர்த்தியாகவும் நிறுவனத்தில் எமது நிலைக்கு ஏற்றவாறு ஆடை அணிய வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

SKILLS

COLLABORATION

07/15/2020

COMMUNICATION & PRESENTATION

07/16/2020

CREATIVITY

07/17/2020

CRITICAL THINKING

07/18/2020

DIVERSITY

07/19/2020

FINANCIAL LITERACY

07/20/2020

FLEXIBILITY

07/21/2020

INFORMATION LITERACY

07/22/2020

INITIATIVE

07/23/2020

INNOVATION

07/24/2020

LEADERSHIP

07/25/2020

LIFELONG LEARNING

07/26/2020

MEDIA LITERACY

07/27/2020

PROBLEM SOLVING

07/28/2020

PRODUCTIVITY

07/29/2020

PROFESSIONALISM

07/30/2020

SOCIAL RESPOSIBILITY

07/31/2020

SOCIAL SKILLS

08/01/2020

TEAM WORK

08/02/2020

TECHNOLOGY LITERACY

08/03/2020

VOCATIONAL PERSONALITY

08/04/2020

ஒன்றிணைந்து செயற்படல் இன்றைய திறன்; ஒன்றிணைந்து செயற்படல் என்பது உங்களுக்காக அல்லது உங்கள் குழுவினருடன் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு மற்றொரு நபர் அல்லது குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன். NEXT     இந்த திறன் ஏன் முக்கியமானது? ஒன்றிணைந்து செயற்படல் என்பது உங்கள் வெற்றிகரமான வியாபாரத்தின் ரகசியங்களில் ஒன்றாகும் மிகப் பெரிய பணியை விரைவாகவும் திறமையாகவும் செய்ய முடியும் நீங்கள் ஒரு தொழில்முனைவோர் என்று கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் வெவ்வேறு நபர்களையும் நிறுவனங்களையும் சமாளிக்க முடியும். NEXT     இந்த திறனை எவ்வாறு வளர்ப்பது? Step one உங்கள் குறிக்கோள்களையும் விரும்பிய முடிவுகளையும் முதலில் கண்டறிந்து அதை குழுவினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். செய்ய வேண்டியதை எவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை விவாதித்து முடிவு செய்யுங்கள். Step three உங்கள் செயல் திட்டத்தில் எந்த வேலையை யார் செய்வது என்று தீர்மானியுங்கள், ஒவ்வொரு நபரும் வெவ்வேறு வகையான வேலை செய்யும் தன்மை கொண்டவர்கள் NEXT     Step two ஒன்றிணைந்து செயற்படல் இன்றைய திறன்; ஒன்றிணைந்து செயற்படல் என்பது உங்களுக்காக அல்லது உங்கள் குழுவினருடன் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு மற்றொரு நபர் அல்லது குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன். NEXT    

"தொடர்பாடலும் விளக்கக்காட்சியும்” இன்றைய திறன் ; கேட்பதைப் புரிந்துகொள்வதில் நம் கலாச்சார ரீதியிலான புரிதல்கள் மற்றும் நமது சொந்த உணர்ச்சிகள் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணங்களினால் கேட்பவர் மற்றும் பேசுபவர் மூலம் தொடர்பாடல் பாதிக்கப்படலாம். NEXT     தொடர்பாடல் என்பது நீங்கள் பேச்சு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ சைகைகள் மற்றும் நடத்தைகள் மூலமாகவோ இன்னொருவருக்கு தகவல் ஒன்றைத் தெரிவிக்கும் செயலாக இருக்கின்றது. தொடர்பாடல் ஏன் முக்கியம் பெறுகின்றது. புதியவற்றை அறிந்து கொள்வதற்கும் எமது எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்வதற்கும் திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் NEXT     பொழுதுபோக்கு மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதற்காகவும் பயன்படுகிறது. தொடர்பாடல் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம்: ஆகிய செயல்களைத் தொடர்ந்து செய்துவரல் வேண்டும். பிறருடன் தொடர்பு கொள்ள முன் வழங்கவுள்ள விடயத்தில் தெளிவு வேண்டும். பொருத்தமான மொழிநடையை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல் : மற்றவர்களின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளுதல் NEXT     தொடர் பயிற்சி What is communication and presentation? Skill of the day; Communication is the way we convey a message to another person through our speech, written words, signs, and behavior. Presentations make it easy to ‘present’ or show complex information in small bite-sized chunks. NEXT    

"படைப்பாற்றல்" / "ஆக்கத்திறன்" இன்றைய திறன்; படைப்பாற்றல் என்பது நாம் ஒன்றை உருவாக்குவதற்கு நம் கற்பனையையும் எண்ணங்களையும் சிறப்பாக பயன்படுத்துவதாகும். இதனை வரையறுப்பது அவ்வளவு எளிதானதல்ல. மேலும் ஒரு சிக்கலை ஆக்கபூர்வமாக தீர்ப்பது வரையிலான எதனையும் இது உள்ளடக்கும். NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? படைப்பாற்றல் மற்றவர்கள் நினைத்திருக்காத தீர்வுகளை வழங்க வழிவகுக்கின்றது. ஒரு யோசனையை ஒரு தயாரிப்பு அல்லது சேவையாக மாற்றுவதன் மூலம், நீங்கள் அதிகமானவர்களை அடையக்கூடியதாக இருக்கும். NEXT     இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? படைப்பாற்றல் தொடர்பில் கற்பிப்பது எளிதான விடயமல்ல. ஒரு விடயத்தின் புதிய இணைப்பைக் காண அல்லது புதிய கண்ணோட்டத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். புதிய யோசனைகளுக்கு இடம் கொடுப்பவராகவும் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிகள் மற்றும் அந்த புலத்தில் அறிவினை உடையவராகவவும் இருக்க வேண்டும். NEXT     பிரச்சினை அல்லது தேவையை உங்கள் பார்வையாளர்கள் அல்லது அணியின் பார்வையில் இருந்து பார்ப்பது மற்றும் சரியான கேள்விகளை கேட்பதன் மூலமும் இதனை சாத்தியப்படுத்தலாம். What is creativity? Skill of the day; Creativity is how we use our imagination or thoughts to create something that speaks to others. It is not easy to define, and can include anything from an art piece to creatively solving a problem. NEXT    

விமர்சன ரீதியாக சிந்திப்பது இன்றைய திறன்; விமர்சன ரீதியாக சிந்திப்பது என்பது ஒரு பிரச்சினையை புறநிலையாகப் பார்ப்பது மற்றும் நியாயமானதும் சரியானதுமான ஒரு பகுப்பாய்வு அல்லது தீர்ப்பை உருவாக்குவதைக் குறிக்கும் NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? நீங்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க கற்றுக்கொள்ளவதுடன் சிக்கல்களின் உறவையும் அவற்றின் தொடர்பு முறையையும் அடையாளம் காண உதவும் நீங்கள் அதைச் செய்தவுடன், இணைப்புகள் மற்றும் பொருத்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் குறித்த விடயத்தில் ஒரு கருத்தை உருவாக்கலாம். NEXT     நீங்கள் ஒரு கணித சிக்கலைத் தீர்ப்பது போல, உங்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு பிரச்சினையை ஒரு புறநிலை வழியில் பார்க்க உதவும் இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கான முதல் படி உங்களை தினசரி பகுப்பாய்வு செய்வதாகும்.. பின்வரும் கேள்விகளைக் கேட்பதன் மூலம் நீங்கள் விமர்சன ரீதியாக சிந்திக்க ஆரம்பிக்கலாம். நீங்கள் அவ்விடயம் தொடர்பில் ஒரு விவாதத்தையும் நடத்தலாம். மற்றவர்களின் வாதத்தின் அல்லது சூழ்நிலையின் பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். NEXT     யார்? என்ன? எப்போது? எங்கே? ஏன்? எப்படி? ஆகிய கேள்விகளை தொடுப்பதனுடாக என்ன நடக்கிறது என்பதை விரைவாகப் புரிந்துகொண்டு அது தொடர்பில் ஒரு கருத்தை உருவாக்கலாம்.

பன்முகத் தன்மை இன்றைய திறன்; பன்முகத் தன்மை திறன் என்பது மக்களின் வேறுபட்ட பின்னணி, கருத்துக்கள், சாதி, கலாச்சாரம் மற்றும் பால்நிலை போன்றவற்றை உள்வாங்கி ஒருவர் சிறப்பாக செயற்படும் திறனைக் குறிக்கும். NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? பன்முகத்தன்மை மனநிலையை கவனத்தில் கொள்வதும் உங்களிடமிருந்து வேறுபட்டவர்களை சேர்ப்பதும் மிகவும் முக்கியமானது. நீங்கள் அதைச் செய்தவுடன், இணைப்புகள் மற்றும் பொருத்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் குறித்த விடயத்தில் ஒரு கருத்தை உருவாக்கலாம். NEXT     பன்முகத்தன்மை ஒரு செழிப்பான அறிவைக் கொடுக்கின்றது. இல்லாவிடில் அதனை நீங்கள் தவற விடுவீர்கள். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? எல்லா தொடர்பாடல்களையும் திறந்த நிலையில் பேணுவதிலும். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிபதிலும் உறுதியாய் இருங்கள். உங்கள் குழுவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக இடம் வழங்கி அதிக பன்முகத்தன்மையினை ஏற்படுதல் NEXT     புதிய சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம் மாறுபட்ட கண்ணோட்டத்தை அடையவும் பழைய சிந்தனைகளில் சிக்கிக்கொள்ளாமலும் இருங்கள். ஆனால் அவற்றை பரிசோதனை செய்யுங்கள்.

நிதிசார் கல்வி அறிவு இன்றைய திறன்; நிதிசார் கல்வி அறிவு என்பது நாம் எமது நிதி இலக்குகளுக்குகளை அடைவதற்கு குறுங்கால மற்றும் நீண்ட கால திட்டத்துடன் பணத்தை திறம்பட நிர்வகிக்கும் திறனாகும். NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? நிதிசார் கல்வி அறிவினை பயன்படுத்தி மூதலீடுகளை மோற்கொள்ளுவதன் மூலம் பணத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். அன்றாட வாழ்வில் எமது வரவு செலவுகளை சமநிலைப்படுத்துவதற்கு உதவும். நிதி இலக்குகளுக்கான குறுங்கால நீண்ட கால திட்டத்தை தீட்டவும் செயற்படுத்தவும் NEXT     இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? பாதீட்டினை செய்வதன் மூலம் நிதிசார் அறிவை மேம்படுத்த முடியும். எமது சொந்த பணத்திற்கான வட்டி சேமிப்பு வீதம் மற்றும் வணிகத்திற்கான மூதலீட்டு விருப்புகளை அறிந்திருக்க வேண்டும். நிதிசார் சிறந்த தீர்மானங்களை நிறைவேற்ற சமகால புதிய தகவல்கள் மற்றும் வாய்ப்புக்களை அறிந்திருக்க வேண்டும். NEXT    

நெகிழ்வுத்தன்மை இன்றைய திறன்; நெகிழ்வுத்தன்மை என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எம்மை நாம் மாறிக்கொள்வதன் மூலம் அதனால் ஏற்படவிருந்த அழுத்தங்களை மாற்றியமைக்கும் திறனாகும். NEXT     இந்த திறன் ஏன் முக்கியமானது? சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக மனந்தளர்ந்து அழுத்தமடையாது வேலைசெய்வதற்கு இத்திறன் உதவுகின்றது. அலுவலக வேலையில் உயர் மட்டத்தில் இருப்பதற்கு விரைவாக மாற்றத்தை உள்வாங்குவதற்கும் பிரதிபலிப்பதற்கும் இத்திறன் அவசியம். NEXT     வேலை உலகில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால் அதைச் சமாளிக்க உங்களுக்கு நெகிழ்வுத்தன்மை உதவும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? சில நேரங்களில் புதிய திட்டத்தின் அதிகரித்த வேலைக்காக நீண்ட நேரம் வேலைசெய்யும் இயலுமை தேவைப்படல். உங்கள் வழமையான பணிபுரியும் இடத்தில் அல்லாது வேறு இடத்திலிருந்து வேலை செய்தல் போன்ற ஒரு சிறிய மாற்றத்தை செய்தல். NEXT     சில நேரங்களில், நீங்கள் பணிபுரியும் திட்டத்திற்கு விளக்கக்காட்சிக்கு முன் கடைசி நிமிடத்தில் புதிய அல்லது வேறுபட்ட தகவல்கள் தேவைப்படலாம், அதை விரைவாகக் கண்டுபிடித்து சேர்ப்பது போன்றவற்றைக் கூறலாம்.

தகவல் கல்வி அறிவு இன்றைய திறன்; தகவல் கல்வியறிவு நமக்கு என்ன தகவல் தேவை அது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவும் சிறந்த தகவல்களின் ஆதாரங்களை அறிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் தகவல்களைப் பகிரவும் அனுமதிக்கிறது. NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? தகவல்களால் இயக்கப்படும் சமூகத்தில் தகவல் கல்வி அறிவு முக்கியமானது. தேவையான பெறுபேற்றை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றை பகிர்வதற்கும் முக்கியமானதாகும். NEXT     குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்கான சரியான தகவல்களைப் பெறவும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? உலகளாவிய வலைப்பின்னலில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன் தகவல் மூலங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். எமது பிரச்சினை என்ன என்பதை அறிந்து அதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். NEXT     பயன்படுத்தும் மூலங்களில் கவனமாக இருத்தல் வேண்டும் ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னர் மூலங்களின் பெறுபேறுகளை விமர்சன மதிப்பீடு செய்ய வேண்டும்.

முன்முயற்சி இன்றைய திறன்; முன்முயற்சி என்பது என்ன செய்ய வேண்டும் என்று எப்போதும் மற்றவர்களால் வேண்டப்படாமல் தாமாகவே முன்வந்து சூழ்நிலையை உணர்ந்தவர்களாக வேலைகளைப் பொறுப்பேற்று செயலாற்றும் திறனையே இது குறிக்கின்றது. NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? நிறுவனங்கள் முன் முயற்சிக்கு மதிப்பு கொடுகின்றனர் ஏனெனில் முகாமைத்துவம் போலவே ஊழியர்களும் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கருத்தில் கொள்கினறனர். தமது வாடிக்கையாளருடனான உறவைப் மேம்படுத்துவதற்கும் இது உதவுகின்றது. NEXT     முன்முயற்சியைக் காண்பிக்கும் நபர்கள் தாங்களாகவே சிந்திக்க முடியும் எனவும் தேவைப்படும்போது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நிரூபிக்கின்றனர் இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? அணி அல்லது அலுவலகத்திற்கு நீங்கள் உதவக்கூடிய வழிகளில் உதவுதல். அதிக பொறுப்புகளை தீவிரமாக தேடுவது மற்றும் புதிய பல விடயங்களைச் செய்வதன் மூலம் NEXT     மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் முன்வருதல் அல்லது சில அலுவலக பணிகளில் புதிய யோசனைகள் அல்லது சேவைகளின் பட்டியலை நீங்கள் கொண்டு வருதல் போன்றவை மூலம். முன்முயற்சி இன்றைய திறன்; முன்முயற்சி என்பது என்ன செய்ய வேண்டும் என்று எப்போதும் மற்றவர்களால் வேண்டப்படாமல் தாமாகவே முன்வந்து சூழ்நிலையை உணர்ந்தவர்களாக வேலைகளைப் பொறுப்பேற்று செயலாற்றும் திறனையே இது குறிக்கின்றது. NEXT    

கண்டுபிடித்தல் இன்றைய திறன்; கண்டுபிடித்தல் என்பது புதிய வழிகள் அல்லது புதிய யோசனைகளூடானா செயன்முறைகளைக்கொண்டு புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு தீர்வு வழங்கும் திறனாகும். NEXT     பிரச்சினை அல்லது தேவைக்கு புதியகண்டுபிடிப்பின் மூலம் ஒரு சிறந்த தீர்வை வழங்கலாம் NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? புதிய யோசனைகளும் படைப்பு சிந்தனையும் புதுமையின் அடித்தளம். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? அந்த பிரச்சினை மக்களை எவ்வாறு பாதிக்கின்றது? மக்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்? என திட்டம் தீட்ட வேண்டும். புதியதை கண்டுபிடிக்க முதலில் என்ன பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென இனங்காண வேண்டும். NEXT     இறுதியாக பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பீர்கள் என்பது பற்றி ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். கண்டுபிடித்தல் இன்றைய திறன்; கண்டுபிடித்தல் என்பது புதிய வழிகள் அல்லது புதிய யோசனைகளூடானா செயன்முறைகளைக்கொண்டு புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு தீர்வு வழங்கும் திறனாகும். NEXT    

தலைமைத்துவம் இன்றைய திறன்; ஒரு இலக்கை அடைய வரையறுக்கப்பட்ட வளங்களை சிறப்பான முறையில் சக குழுவினருடன் இணைந்து பகிர்ந்தளிக்கப்பட்ட இலக்காகக்கொண்டு முன்னுதாரணமாகவும் உத்வேகத்துடனும் வழிநடத்தும் திறனாகும் NEXT     குழுவினரை ஊக்கப்படுத்தி இறுதி இலக்கை அடைவதற்கு வழிகாட்டுவதற்கு NEXT     ஒரு நல்ல தலைமைத்துவம் நிறுவனத்தின் இலக்கை நோக்கி அணி செயற்படுவதற்கு நன்றாக தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்துவார். இந்த திறன் ஏன் முக்கியமானது? அணியையும் அதற்கு பொறுப்பானவர்களையும் வழி நடத்தவும் ஏதாவது பிழையாக சென்றால் திருத்துவதற்கு உதவிசெய்வதற்கும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்? தலைவர் நேர்மறையானவராகவும் ஊக்கப்படுத்தப்பட்டவராகவும் இருக்க வேண்டும். NEXT     வாழ்க்கையில் ஒழுக்கத்தை வளர்ப்பது ஒரு திறமையான தலைவராக இருக்கவும், மற்றவர்களும் ஒழுக்கமாக இருக்க ஊக்குவிக்கவும் அவசியம். தலைவர் அணிக்கு சரியான நேரத்தில் ஆக்கபூர்வமான பின்னூட்டலை வழங்குவது அவர்களை முன்னரை விட சிறப்பாக செயற்பட செய்யும். தலைமைத்துவம் இன்றைய திறன்; ஒரு இலக்கை அடைய வரையறுக்கப்பட்ட வளங்களை சிறப்பான முறையில் சக குழுவினருடன் இணைந்து பகிர்ந்தளிக்கப்பட்ட இலக்காகக்கொண்டு முன்னுதாரணமாகவும் உத்வேகத்துடனும் வழிநடத்தும் திறனாகும் NEXT    

வாழ்நாள் முழுவதும் கற்றல் இன்றைய திறன்; வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது தன்னார்வ மற்றும் சுய உந்துதலின் ஊடாக தனிப்பட்ட அல்லது தொழில்முறை காரணங்களுக்காக அறிவைத் தேடும் செயலின் மூலம் சுய-நிலைத்திருதன்மையை உறுதிப்படுத்தும் திறனாகும். NEXT     நீங்கள் சுயமாக தங்களை இயக்கும் போது நீங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட விரும்புவீர்கள் NEXT     பெரும்பாலானோர் பாடசாலையை விட்டு விலகியதும் கற்பதை நிறுத்துகின்றனர். ஆனால் அதன் பின்னரான தேடலானது உலகைப்பற்றிய புரிதலை அதிகரிக்கும். இந்த திறன் ஏன் முக்கியமானது? நீங்கள் சுய வழிநடத்துபவராக, வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான பொறுப்புடையவர் ஆவர். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? உங்களின் நண்பர் அல்லது அறிவுரையாளரின் உதவியுடன் கல்வி வளங்களை கண்டறிவதுடன் அதிலுள்ள ஆபத்துக்களையும் தெரிந்துகொள்ளுங்கள் NEXT     முதலில் நீங்கள் மேலதிகமாக அறிய விரும்புகின்ற விடய பகுதியை தெரிவு செய்யுங்கள். இறுதியாக தகவல் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கற்றலை தொடருங்கள்.

ஊடக கல்வியறிவு இன்றைய திறன்; பல்வேறு வகையான ஊடகங்களின் செய்திகளை அடையாளங்கண்டு அதனைப்பெறுவதிலும் மற்றும் அதனை ஆராய்வதனைக்கொண்டு கிடைக்கப்பெறுகின்ற தகவல்களைப் புரிந்துகொண்டு செயற்படும் திறனாகும் NEXT     பெருமளவிலான மீடியாக்கள் எமக்கு பல்வேரு தகவல்களை வழங்குகின்றன. NEXT     இந்த திறன் ஏன் முக்கியமானது? நாம் ஊடகங்களை அணுக கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அதை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் சரியான தேர்வுகளை எடுக்க உதவிபுரியும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? விளம்பரம் செய்யும் போது அது தனது தயாரிப்புக்களை எங்களை வாங்கும் வண்ணம் வற்புறுத்துவதற்கு பயன்படுத்துகின்றதா என்பதையும் அடையாளம் காண வேண்டும். NEXT     ஊடகங்களின் சொந்த நிகழ்ச்சி நிரல்களையும் உங்களுக்கு பிடித்த ஊடகம் எதை அடைய முயற்சிக்கிறது என்பதையும் அவர்கள் தங்கள் தொடர்பில் காண்பிக்கும் பார்வையையும் அடையாளம் காண வேண்டும். நீங்கள் எதையும் வாங்க முடிவு செய்வதற்கு முன் பக்கச்சார்பற்ற கருத்துகள் அல்லது பயனர் மதிப்புரைகளைத் தேடுவதுடன் பரிசீலைகளை செய்யுங்கள்.

பிரச்சினையைத் தீர்த்தல் இன்றைய திறன்; பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பல்வேறு முறைகள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி பிரச்சினைகளை சரியான நேரத்தில் இனங்கண்டு அதனை ஆக்கபூர்வமான சிந்தனைகளைக்கொண்டு சரியான நேரத்திற்குள் தீர்க்கும் கலையாகும். NEXT     நாம் நாளாந்தம் தீர்க்க வேண்டிய பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். NEXT     மாறுபட சிந்தனையுள்ள குழு உறுப்பினருடன் நீங்கள் பணி புரிய வேண்டி இருக்கும். இந்த திறன் ஏன் முக்கியமானது? கோபமான வாடிக்கையாளரை நீங்கள் கையாள வேண்டி இருக்கும். அலுவலகத்தில் ஒரே நாளில் பல சிக்கல்களை நீங்கள் சமாளிக்க வேண்டி இருக்கும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? பின்னர் நீங்கள் தர்க்க ரீதியாக உங்கள் அறிவை பயன்படுத்தி எவ்வாறு தீர்க்கலாம் என சிந்திக்கலாம். NEXT     பிரச்ச்சினையை புரிந்துகொள்வதற்கு ஏற்றவாறு சிறிய பகுதிகளாக உடைத்தால் தீர்ப்பது இலகுவாக இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளை மற்றவர்கள் எவ்வாறு தீர்த்தார்கள் என்பதைப் பார்க்க நீங்கள் அதைப் பற்றி ஆய்வு செய்யலாம். பிரச்சினையைத் தீர்த்தல் இன்றைய திறன்; பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பல்வேறு முறைகள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி பிரச்சினைகளை சரியான நேரத்தில் இனங்கண்டு அதனை ஆக்கபூர்வமான சிந்தனைகளைக்கொண்டு சரியான நேரத்திற்குள் தீர்க்கும் கலையாகும். NEXT    

உற்பத்தித் திறன் இன்றைய திறன்; உற்பத்தித் திறன் என்பது நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்பது பற்றியது. குறிப்பிட்ட அளவு உழைப்பிற்குப் பெறும் பலனாக அதனைக் கருதலாம்.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான உள்ளீடுகளை பயன்படுத்தி எவ்வளவு வெளியீடுகள் பெறப்பட்டன என்பதனை நீங்கள் பார்க்கலாம். குறைந்த உள்ளீடு (நேரம் அல்லது பொருள் ) அதிக வெளியீட்டை வழங்கும் போது அதை உற்பத்தித் திறன் என அழைக்கின்றோம்.
NEXT    
உங்கள் அலுவலக பணிக்கு உற்பத்தித் திறன் சிறப்பான ஒரு சொத்தாக இருக்கும். NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? உற்பத்தித் திறனாக இருப்பது குறைந்தளவு நேரத்தில் அதிகளவு வேலையினைச் செய்யக் கூடியதாக இருக்கும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்? உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் அதிகளவு கவனம் செலுத்தவும். NEXT     உங்களுக்கென்று ஒரு செயல்முறையை வகுத்துக்கொள்ளல். உங்களை சுற்றி இருக்கும் தேவையற்றவற்றை நீக்குவது முக்கியமானதாகும்.
கடினமான வேலைகளைக் காலையில் செய்வது சிறந்தது.

தொழில் நிபுணத்துவம் இன்றைய திறன்; தொழில் நிபுணத்துவம் என்பது நாம் எவ்வாறு வேலை புரியூம் இடத்தில் அல்லது வேலையில் சிறந்த நடத்தை, தோற்றம் மற்றும் பணியிட நெறிமுறைகளைப் பேணுகின்றோம் என்பதையே கருதுகின்றது. NEXT     உங்கள் தொழில் வெறிக்கு தொழில் நிபுணத்துவம் என்பது மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாகும் NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? தொழில்முறை உயர் தரங்களைக் கொண்ட ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களை விட நம்பகமானவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் உணரப்படுகிறார்கள். தொழில் நிபுணத்துவம் இல்லயென்றால் எமது பிரதிபலிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? நம்பகத்தன்மை உடையவராகவும் நேர ஒழுங்கை பேணுபவராகவும் இருத்தல் வேண்டும். NEXT     கவனமாகவும் நேர்த்தியாகவும் நிறுவனத்தில் எமது நிலைக்கு ஏற்றவாறு ஆடை அணிய வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சமூகப் பொறுப்பு இன்றைய திறன்; சமூகப் பொறுப்பு என்பது எங்கள் செயல்களின் மூலம் சமூகத்திற்கும் உலகிற்கும் பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுவதையே இத்திறன் குறிக்கும் NEXT     தற்பொழுது சமூகப் பொறுப்பு முக்கியமான வார்த்தையாக மாறியுள்ளதுடன் பல நிறுவனங்கள் சமூக பொறுப்பு கொள்கையை வலியுறுத்துகின்றன. NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? இது நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையில் ஒரு பகுதியாகவும் உள்ளது. நிறுவனங்கள் உலகிற்கு நன்மை புரியம் வகையில் செயற்பட முனைவது சமூகப்பொறுப்பு திறனின் தேவையை அதிகரித்துள்ளது இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? நல்லவை மற்றும் தீயவற்றை பகுத்தறிந்து கொள்வதுடன் நல்ல செயல்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் NEXT     பொறுப்புள்ள குடிமகனாக இருப்பதற்கு உலகிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை அறிந்து கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்பினை நிறுவனத்தின் ஒரு பகுதி ஆக்குவதன் மூலமும் அதிக மக்களின் ஈடுபாட்டின் மூலமும் மேலும் வெற்றி அடையலாம்.

சமூகத்திறன் இன்றைய திறன்; சமூகத்திறன் என்பது இலக்குகளை அடைவதற்கு நாம் மற்றவர்களுடன் பணியாற்றும் போது எம்மை சிறப்பானவராக எடுத்துக்காட்டும் நம்மிடம் இருக்கும் சிறந்த தனிப்பட்ட குணங்கள் அல்லது இயல்புகளை இது குறிக்கும். NEXT     சமூகத் திறன்களை கொண்டவராக இருக்கும் பொழுது குழுவாக இணைந்து பணியாற்றவும் எளிதாக எமது இலக்குகளை அடையவும் உதவும். NEXT     ஏன் இந்த திறன் முக்கியமானது? ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது ஒன்றாக வேலை செய்ய விரும்புவதை உறுதிப்படுத்திக்கொள்ள இத்திறன் அவசியமானதாகும். ஏனெனில் சிறந்த குணங்களை கொண்டவராக இருக்கும் போது மற்றவர்கள் உதவி புரியவும் இணைந்து வேலை புரியவும் விரும்புவார்கள். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? நல்லவை மற்றும் தீயவற்றை பகுத்தறிந்து கொள்வதுடன் நல்ல செயல்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் NEXT     பொறுப்புள்ள குடிமகனாக இருப்பதற்கு உலகிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை அறிந்து கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்பினை நிறுவனத்தின் ஒரு பகுதி ஆக்குவதன் மூலமும் அதிக மக்களின் ஈடுபாட்டின் மூலமும் மேலும் வெற்றி அடையலாம்.

குழுப்பணி இன்றைய திறன்; ஒரு திட்டத்தினை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து பூர்த்தி செய்யும் திறமை குழுப்பணி ஆகும். பல்வேறு அமைப்புக்களில் குழுப்பணி சிறப்பாக செயற்படுகின்றது. NEXT     குழுப்பணி கடினமான சிக்கல்களை தீர்க்க உதவும். NEXT     குழுப்பணி ஒரு முறைமையை ஏற்படுத்தி விரைவாகவும் தரமாகவும் வேலைகளை நிறைவு செய்ய உதவுகின்றது ஏன் இந்த திறன் முக்கியமானது? ஆகவே ஒவ்வொரு உறுப்பினருடைய பங்களிப்பும் வெற்றிக்கு மிக முக்கியம். இன்றைய உலகில் குழுப்பணி முக்கியமான ஒரு திறமை என்பதால், நிறுவனங்கள் குழுவில் சிறப்பாக செயல்படக்கூடியவர்களை தேடுகின்றன. இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? நீங்கள் எதிர்பார்ப்பதை தெளிவாக அணியில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். NEXT     ஆரம்பத்தில் இருந்தே அணியின் குறிக்கோள்கள் மற்றும் பணியை உறுப்பினருக்கு விளக்குங்கள். குழுவினருடன் மரியாதையாக இருங்கள். மற்றும் அவர்களது கருத்துக்களையும் கேளுங்கள், சிறப்பான புதிய கருத்துக்களை பாராட்டுங்கள்.

தெழில்நுட்ப கல்வியறிவு இன்றைய திறன்; தொழில்நுட்பறிவு என்பது தகவல் மூலங்களை ஆராய்ந்து தொடர்புகொள்ள தற்கால பொருத்தமான தொழிநுட்ப சாதனங்களை பாதுகாப்பாகவும் திறன்படவும் பயன்படுத்துவதனைக்கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனாகும். NEXT     தகவலை அணுகவும் பகுப்பாய்வு செய்யவும் தெரிந்தவற்றைப் பகிரவும் புதிய விடயங்களை உருவாக்கவும் உதவுகின்றது. NEXT     நீங்கள் எதை எவ்வாறு எங்கு செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கும். இந்த திறன் ஏன் முக்கியமானது? பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பணிக்கு தேவையான தகவல்களை நிர்வகிக்கவும் உதவுகின்றது. இந்த திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கும் போது, உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரச்சினையை தீருங்கள். NEXT     நீங்கள் புதிய தொழில்நுட்பத்தை உடனுக்குடன் புதிப்பித்த நிலையில் இருக்க வேண்டும். அவ் வேலையை விரைவாக செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை தேடுவதற்கும் அதைப் பரிசோதிக்கவும் பயப்பட

தொழில் ஆளுமை இன்றைய திறன்; தொழில் ஆளுமை என்பது ஒரு நபரின் தனிப்பட்ட தேவைகள், பின்னணி மற்றும் அனுபவித்தவற்றிலிருந்து வேலை தொடர்பாக அவருக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட இயலுமையை இது குறிக்கின்றது. NEXT     ஒருவரால் எல்லாவற்றையும் செய்ய முடியாது அவர் சில விடயங்களை செய்வதில் மாத்திரம் சிறப்பானவராக இருப்பார். NEXT     ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு நீங்கள் எதில் சிறந்தவர் என்பதை புரிந்துகொள்வது கட்டாயமாகும். ஏன் இந்த திறன் முக்கியமானது? இது நீங்கள் வேலையில் முழுமையாக பங்களிப்புச் செய்ய உங்களுக்கு உதவும். இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? அணி அல்லது அலுவலகத்திற்கு நீங்கள் பங்களிக்கக்கூடிய சிறந்த வழியைக் காண உங்களுக்கான பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். NEXT     தொழில் ஆளுமை சோதனைகளை எடுக்கலாம் அல்லது நீங்கள் எங்கு பொருந்துகிறீர்கள் என்பதைப் பார்க்க திட்டங்களில் உங்கள் திறமைகளை சோதிக்கலாம்.