அதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்

Human Brain

நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது. நமது நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துகிறது மூளை.

மூளையைப்பற்றிய சில உண்மைகளை நாம் பார்க்கலாம்…

  1. நமது மூளையின் மொத்த எடையில் 60% கொழுப்பால் ஆனது.
  2. மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.
  3. நாம் விழித்திருக்கும் போதே நமது மூளையில் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்க நிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போது தான் வைத்தியர்களால் அறியமுடியும்.
  4. 25 வோட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையால் தரமுடியும்.
  5. எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது.
  6. மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.
  7. மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள கலங்களுக்கு அனுப்ப உதவுகின்றன.
  8. 20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.
  9. வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையது தான் நமது மூளை என்கிறார்கள்.
  10. நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம்.
  11. நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
  12. நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.
  13. மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது.
  14. மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நமக்குள் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது.

Colour Match

 

மேலே உள்ள படத்தில் உள்ள ஏ மற்றும் பி கட்டங்கள் வெவ்வேறு வண்ணங்கள் என்று நினைப்பீர்கள். உண்மையில் அவை இரண்டும் ஒரே வண்ணம்தான்.

  1. நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.
  2. மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் இரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கணினியில் தட்டச்சும் செய்ய முடியும்.
  3. நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம்.
  4. கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.
  5. நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் (Quad Trillion) என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…
  6. நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.

 

என்ன நண்பர்களே! இங்கு குறிப்பிட்ட விடயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? மூளை நீங்கள் அறிந்த புது விடயங்களையும் இங்கு பதிவுசெய்யுங்கள். அவை ஏனையோருக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

You may also like

Leave a comment