குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி – II

Inspiring Personnel

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறேம். இதன் <>பகுதி I<> யும் படிக்கவும்.

 

ஓப்ரா வின்ஃப்ரே

 

Oprah Winfrey

 

ஓப்ரா வின்ஃப்ரே, தான் நடத்திய மிக பிரபலமான ’தி ஓப்ரா வின்ஃப்ரே’ என்ற பல பரிசுகளை வாங்கிய நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் புகழ் பெற்றவர்.  இதன் மூலம் இவருக்கு ’ஊடகங்களின் அரசி’ என்ற பட்ட பெயரும் உண்டு.  இவர் இருபதாம் நூற்றாண்டின் பணக்கார ஆப்ரிக்க-அமெரிக்கர் என்று பணக்காரர்கள் தரவரிசையில் இடம் பெற்றவர்.

இவர் மிசிசிப்பியில் ஒரு ஏழ்மையான சிறு வயதிலேயே தாயான பெண்ணுக்கு மகளாக பிறந்தவர்.  இவர் தனது 9 ஆவது மற்றும் 13 ஆவது வயதில் கற்பழிக்கப்பட்டவர்.  இவர் சிறுவயதிலியே பாலியல் தொந்தரவு தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவர்.  தனது 14 ஆவது வயதிலேயே தாயானவர்.  இவரது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது.  இவர் பள்ளியில் படிக்கும் போதே வானொலியில் மாலையில் செய்திகள் படிக்கும் வேலைக்கு சேர்ந்தார்.  பின்பு இவரது திறமையை பார்த்து இவரை காலையில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சிக்கு மாற்ற பட்டார்.

இவர் தனது 32 ஆவது வயதில் தனது நிகழ்ச்சியின் மூலம் கோடீஸ்வரர் ஆனர்.  ஃபோபர்ஸ் பத்திரிக்கை இவரை உலக பணகாரர்கள் வரிசையில் பட்டியலிட்டது.   2014 ஆம் ஆண்டு வரை இவரது சொத்தின் மதிப்பு டாலர் 2.9 பில்லியன்.

 

லாரி எலிசன்

 

Larry Ellison

 

லாரி எலிசன் ஒரு திருமணமாகாத யூத பெண்ணுக்கு பிறந்தவர்.  இவரது தந்தை ஒரு இத்தாலிய-அமெரிக்க விமான ஓட்டி.  இவர தன் ஒன்பதாவது வயதிலேயே நிமோனியாவால் பாதிக்கப் பட்டவர் மற்றும் தன் தாயாரால் உறவினருக்கு தத்து கொடுக்கப்பட்டவர் என்று விக்கிபீடியா கூறுகிறது.  தத்தெடுத்த தாய் இவரிடம் மிகவும் அன்பாக இருந்தார்.  ஆனால் இவரது தத்தெடுத்த தந்தை இவரிடம் அதிக அன்பு காட்டவில்லை.

எலிசன் படிப்பில் சிறந்து விளங்கினார்.  தனது தத்தெடுத்த தாய் இறந்ததால் தனது கல்லூரி படிப்பை இரண்டாம் ஆண்டிலெயே நிறுத்தினார். பிறகு சிகாகோ பல்கலைகழகத்தில் தனது படிப்பை தொடந்தார்.  அங்குதான் கம்ப்யூட்டர் வடிவம் பற்றி அறிந்தார்.  1966 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் வட கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தார்.

1977 ஆம் ஆண்டு இரண்டு கூட்டாளிகளை சேர்த்து கொண்டு டாலர் 2000 முதலீட்டில் சாப்ட்வேர் டெவலப்மண்ட் லபாரட்டரிஸ் (Software Development Laboratories – SDL) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  1982 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தனது ஆர்க்கிள் டேட்டாபேஸ் (Oracle Database) என்ற தயாரிப்பு மூலம் ஆர்க்கிள் ஸிஸ்டம்ஸ் கார்ப்ரேஷன் (Oracle Systems Corporation) என்ற பெயர் மாற்றம் பெற்றது. 2011 ஆம் ஆண்டு போபர்ஸ் பத்திரிக்கை இவரை உலக பணக்காரர்கள் பட்டியலில் சேர்த்தது.  உலக பணக்காரர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்தவர் இந்த எலிசன்.  இவரது சொத்தின் மதிப்பு சுமார் டாலர் 36.5 பில்லியன்.

 

இதன் >பகுதி III< யும் படிக்கவும்.

You may also like

Leave a comment