தகவல் வியாபாரம் – பகுதி II

Hackers பற்றி

 

Hackers

 

White hat Hackers என்போர், நிறுவனங்கள் தனது கணினி அமைப்புகளையும் தமது தரவுகளை தாங்கிய வலைத்தளங்களை பாதுகாக்கும் பொருட்டு சட்டரீதியாக இணைத்துக்கொள்ள கணினியல் நிபுணர்கள். இவர்கள் குறிப்பிட்ட அமைப்பிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்திச் செய்ய உதவுவார்கள்.  இவர்களை Cyber Security Research Analyst என்றும் கூறுவார்கள்.  காரணம் இணைய நடவடிக்கைகளின் பாதுபாப்பை உறுதிப்படுத்தல் இவர்களில் முக்கியப்  பொறுப்பாகும்.  அதற்காக இவர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

 

அடுத்ததாக நாம் Black hat Hackers பற்றி பார்ப்போம். இவர்கள் இலத்திரனியல் உபகரணங்களுக்கே அச்சுறுத்தலாக இருக்க வல்லவர்கள். இணையத்துடன் ஏதேனும் உங்கள் இலத்திரனியல் உபகரணம் ஒன்று இணைப்படுமாயின்,  அவர்கள் உட்புக நீங்கள் வழிவகுக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

 

Black hat Hackers இன் செயற்பாடு பிறரின் அந்தரங்களை ஆராய்வது என்று சொல்ல முடியாது. அவ்வாறு செய்பவர்கள் Hackers களுக்கிடையில் சிறு பராயத்தினராகவே கருதப்படுவார்கள்.

 

வல்லமை படைத்தவர்களின் தீவிரமான பக்கத்தைப் பற்றி நாம் இனிப் பார்ப்போம்.

 

இவர்களின் பணமீட்டு செயற்பாடுகளாக,

– அரச இரகசிங்கள்

– அரச பாதுகாப்பு விபரங்கள்

– பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்கள்

– ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள்

– பண மிரட்டல்கள்                                                     போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

 

ஒரு நாட்டின் இரகசியம் அதன் போட்டி நாட்டுக்கு ஒரு பெரிய சொத்தாகும். அவற்றை பல மில்லியன் ரூபாக்களை கொடுத்தாவது பெற்றுக் கொள்ள போட்டி நாடு ஒரு போதும் தயங்காது. இது அனேகமாக வல்லரசு நாடுகளுக்கிடையில் இடம்பெறும் ஒன்றாகும். ஒவ்வொரு தனது பொருளாதாரத்தையும் சமூக மேம்பாட்டையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்காக பலவிதமான முன்னகரவுகளை எடுக்கும். அவற்றை தேடிப்பார்ப்பதற்கும் அவற்றில் சிறப்பம்சங்களை தனது திட்டங்களில் இணைத்துக் கொள்வதற்கும் அதேவேளை குறைப்பாடுகளை கண்டறிந்து அவற்றை தனது நாட்டுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்கும் போட்டி நாடுகளும் அண்டைய நாடுகளும் பெறு முயற்சிகள் எடுக்கும். குறிப்பிட்ட இணைய அமைப்புக்களில் ஊடுறுவி தகவல்களை எடுக்கும் Hackers களிடமிருந்து தகவல்களை நாடுகள் பேறம்பேசாமல் வாங்கும்.

 

நாட்டின் இறையாண்மையோ பாதுகாப்போ சிலவேளைகளில் அதிக விலை போகலாம். காரணம் நாடுகளுக்கிடையில் பனிப்போர் என்பது காலாகாலமாக நடந்து தான் வருகிறது.  எதிரி நாடுகளின் பாதுகாப்புத் தகவல்கள் கொள்கைகளை தயாரித்துக் கொள்வதற்கும் பாதுகாப்பு நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்துவதற்கும் வெகுவாக உபயோகமாகும். குறிப்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலுள்ள இடம்பெறும் பனிப்போரை எடுத்துக்கொள்வோம். எவரேனும் அதன் உக்கிரம் எவ்வளவு என்று பார்த்தால், நாடுகள் இரண்டும் அணு ஆயுதங்களால் போராட வல்லது. இந்நிலைமையில் இருநாடுகளும் ஒற்றர்களை தமது எதிரி நாடுகளில் ஊடுருவச் செய்து தகவல் சேகரிக்கின்றன. அதே சமயம் அரசாங்கத்தாலேயே தமது நாட்டின் இராணுவத்துடனோ வேறேதேனும் பிரத்தியேக தாபனத்துடனோ கணினியல் நிபுணர்களை இணைக்கச் செய்து, உத்தியோகபூர்வ மற்ற ரீதியில் தகவல் திருட்டுகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தின் கருப்புப் பக்கத்தாலோ துப்பறிவு தாபனத்தாலோ அவர்கள் போசிக்கப்படுவார்கள். கணினியல் தகவல் சேகரிப்பின் வல்லுனர் ஒருவர் அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே Hacking செயற்பாட்டை மேற்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு.

 

தொடரும்…

You may also like

Leave a comment